பிரதான செய்திகள் விளையாட்டு

முத்தரப்பு 20 -20 தொடரில் இன்று இலங்கை – பங்களாதேஸ் அணிகள் களத்தில்..

சுதந்திரகிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் இன்றையதினம் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் போட்டியிடவுள்ளன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இரவு 7 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி தனது முதல் போட்டியின் போது 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றிருந்தது. அதேவேளை பங்களாதேஸ் அணி தனது முதல் போட்டியின் போது இந்தியாவிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

மேலும் அண்மையில் பங்களாதேஸ் சுற்றுப்பயணத்தின் போது 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இலங்கை அணி கோப்பையை வெற்றியீட்யுள்ளமை குறிப்பிடத்தக்கது. பபங்களாதேஸ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக இந்தத் தொடரில் விளையாடாதது அந்த அணிக்கு பெரிய இழப்பாக அமைந்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap