உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடர் இடம்பெற்று வந்தது. முதல் 4 போட்டிகளின் முடிவில் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது

இந்தநிலையில் இன்று நடைபெற்ற 5-வதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பினை தெரிவு செய்தது.இதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 49.5 ஓவரில் 223 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அடுத்து 224 என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 32.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers