இந்தியா பிரதான செய்திகள்

இந்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி காங்கிரஸ் மனு


இந்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் சார்பில் மக்களவையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முடக்கி வருகின்றனர்.

மேலும் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடிதம் வழங்கியுள்ளது. எனினும் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவையில் மனு கொடுத்துள்ளது. அம்மனுவில் மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் 27-ம் திகதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers