குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 37 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 41 சிறுவர் சிறுமியர் உள்ளடங்களாக 64 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிலக்கரி அகழ்வு நகரமான கெமிரோவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்து காரணமாக கட்டடம் இடிந்து வீழக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திரையரங்குகளில் இருந்த அதிகளவானவர்களே இவ்வாறு விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு திரையரங்கங்களின் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 600 மீட்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment