இந்தியா பிரதான செய்திகள்

நிக்காஹ் ஹலாலா மற்றும் பல தார மணத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு…

முஸ்லிம் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள நிக்காஹ் ஹலாலா மற்றும் பல தார மணத்துக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

முஸ்லிம் பெண்களை அவரது கணவன்மார்கள் விவாகரத்து செய்ய் 3 முறை தலாக் கூறும் முறை சட்டவிரோதம் என கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்த உச்ச நீதிமன்றம் அது தொடர்பாக சட்டம் இயற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  இந்நிலையில் நிக்காஹ் ஹலாலா மற்றும் பலதார மணத்தை எதிர்த்து கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்றையதினம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அதில் நிக்காஹ் ஹலாலா, பல தார மணம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிய சட்ட அமைச்சகம், சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆத்துடன் அந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. எனவே 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.