சினிமா பிரதான செய்திகள்

15 ஆண்டுகள் நாயகியாக வலம் வந்த நயன்தாராவுக்கு திருமணம்?


பிரபல தென்னிந்திய நடிகை நயன்தாரா நடிப்புக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. அதிலும் 15 ஆண்டுகள் முன்னணி நாயகியாக இவர் இருந்துள்ளார். தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலத்தின் பின்னர் நடிகை ஒருவர் நாயகியாக நிலைத்திருக்கும் அரிதான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இரண்டாம் படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளில் நடிகை நயன்தாரா சிக்குண்டார். சக நடிகர்களுடனான காதல், நெருக்கம் இவைகளின் மத்தியிலும் தனது நடிப்பையும் நடிப்புக்கான இடத்தையும் அவர் இழந்துவிடவில்லை. இந்த நிலையில் நயன்தாராவுக்கும், முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர்.
அத்துடன் இந்த வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக, இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டும் தமது காதலை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அமெரிக்காவில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ருவிட்டரில் வெளியிட்டனர்.

இந்த படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார். நயன்தாராவுக்கு இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்று கைநிறைய படங்கள் உள்ளன. அஜித்குமாரின் விசுவாசம் படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்திலும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது. அடுத்த சில மாதங்கள் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருப்பார் என்றும், இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் நயன்தாரா இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.