குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த திங்கள் கிழமை கடமை நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்த கண்டாவளை பிரதேச செயலர் அமரர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் பெரும்பாலகவர்களின் கண்ணீருடன் விடைப்பெற்றார்.
இன்று 29-03-2018 கிளிநொச்சி பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் க முற்பகல் 11 மணிக்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரும்பாலன பொது மக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவருக்கான இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பெருமளவானர்கள் கலந்துகொண்டனர்.
Spread the love
Add Comment