உலகம் பிரதான செய்திகள்

வெனிசுலா சிறைச்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெனிசுலாவில் சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவின் கராபோபோ மாநிலத்தின் வெலெனிக்கா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையை உடைத்து தப்பிச் செல்லும் நோக்கில் கைதிகள் மெத்தைகளுக்கு தீ மூட்டியுள்ளனர் எனவும்  இவ்வாறு மெத்தைகளுக்கு தீ மூட்டிய போது சிறைச்சாலைக்குள் தீ பரவிக்கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கக்பட்டுள்ளது .நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் முழுமையாக இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.