இலங்கை பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இறுதி தீர்மானம்


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் இன்று கூடவுள்ளது.

கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமான தருசலாமில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அதியுயர் பீடத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அதன் செயலாளர் நாயகம் நிசார் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

அதியுயர் பீடத்தின் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கொழும்புக்கு வெளியில் இருப்பதால், கட்சிக்கும் பிரதமருக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்புகள் எதுவும் நடக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap