காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐபிஎல் போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் எனவும் ஐபிஎல் போட்டியை தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்து வருவதாகவும் காவிரி போராட்டத்தை திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று நடிகர் சங்கம் சார்பில் மௌன போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் இயக்குநர் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், அமீர் உள்ளிட்டவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். இதன்போதே பாரதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக ஒன்று கூடுங்கள். எனவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்
Add Comment