உலகம் பிரதான செய்திகள்

டொனால்ட் டிரம்பின் சட்டத்தரணி மைக்கேல் கோஹன் குற்ற விசாரணை வளையத்தில்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சட்டத்தரணி மைக்கேல் கோஹன் குற்ற விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது அண்மையில் மைக்கேல் கோஹனின் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருந்தனர்.  இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்ததுடன் இது நாட்டின் மீதான தாக்குதல் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மைக்கேல் கோஹன் தொடர்பான வழக்கு, நியூயோர்க் நீதிமன்றில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தநிலையில் அவர் பல மாதங்களாக குற்ற விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. மைக்கேல் கோஹன், டிரம்பின் சட்ட வாடிக்கையாளர் என்ற சலுகையை பயன்படுத்தி, சாட்சியங்களை ஆராயும் அரசின் திறனை முடக்க பார்த்தார் என அரசு தரப்பு சட்டதரணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers