இலங்கை பிரதான செய்திகள்

தவரூபனுக்கு மலம் கழிப்பதற்கு தட்டும், சிறுநீர் கழிப்பதற்கு போத்தலும் கொடுக்கப்படுகிறது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவரும் தமிழ் அரசியல் கைதி இ.தவரூபனுக்காக குரல் கொடு ப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தவறிவிட்டது. என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

அனுராதபுரம் சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதியான இ.தவரூபன் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்படவில்லை. அவர் இன்றளவும் சந்தேக நபராகவே உள்ளார்.

இந்நிலையில் முன்னர் ஒருமுறை யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டபோது தப்பிக்க முயன்றார் எனவும் இப்போதும் அப்படியான திட்டம் அவரிடம் உள்ளதாகவும் கூறி கடந்த பல நாட்களாக மாலை 5 மணி தொடக் கம்  காலை 6 மணி வரை தனியான ஒரு சிறையில் அவர் அடைக்கப்படுகிறார்.

அந்த சிறை அறைக்குள் மலம் கழிப்பதற்கு தட்டு ஒன்றும், சிறுநீர் கழிப்பதற்காக போத்தல் ஒன்றும் வழங்கப்படுகிறது. ஒரு சந்தேக நபருக்கு இவ்வளவு கொடுமைகள் நடத்தப்படுகிறது. இதனை எதிர்த்து தவரூபன் கடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்திவருகிறார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் அனைவருடைய கவனத்திற்கும் கொண்டுவந்தபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

ஜ.நாவில் இலங்கைக்கு கால அவகசாம் வழங்க நிபந்தனையின்றி ஆதரவளித்த கூ ட்டமைப்பு, 2015ம் ஆண்டு இந்த அரசை உருவாக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ய கூட்டமைப்பு, பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நிபந் தனையற்ற வகையில் எதிர்ப்பு தெரிவித்த கூட்டமைப்பு

இவ்வாறான அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணாமல்போனவர்கள் விடயத்தில் அரசிடமிருந்து அல்லது மேற்கு மற்றும் இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து வாக்குறுதி ஒன்றை பெற தவறியுள்ளது. இனிமேலாவது இந்த விடயம் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை ஒன்றை நிச்சயம் எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.