அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த 21-வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. கடந்த 4ம் திகதி அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
அந்தவகையில் பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் 2-ம் இடத்தைப் பெற்றது. இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
நிகழ்வின் இறுதியில் விழாவை சிறப்பாக நடத்திய அவுஸ்திரேலியாவுக்கு பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் மார்ட்டின் நன்றி தெரிவித்தார்.
Spread the love
Add Comment