உலகம் பிரதான செய்திகள்

தன்சானியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு


தன்சானியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகினறமையினால் அங்குள்ள வீடுகளிலும், வீதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையில் நகரில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் பலர் வீடுகளின் மேற்கூரையில் தங்கியுள்ளனர் எனவும் மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்

நகரில் உள்ள பிரதான வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 9 other subscribers