உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் தெற்கு கரோலினா சிறைக் கலவரத்தில் 7 பேர் பலி 17பேர் காயம்..

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  17 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் லீசி பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் அதிகளவான கைதிகள் பலத்த பாதுகாப்புடன்  சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சிறையில் உள்ள கைதிகள் 2 பிரிவுகளாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. அப்போது சிறையில் குறைந்த அளவே காவலர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது.

அவர்கள் கலவரத்தை அடக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருந்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைதிகள் ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளால் சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டனர். இக்கலவரத்தில் சிறைக்கைதிகள் 7 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.  அமெரிக்க சிறைகளில் கைதிகளுக்கு இடையே இத்தகைய கொடூரமான வன்முறை தாக்குதல்கள் நடைபெறுவதில்லை என கூறப்படும் நிலையில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers