ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் போது நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 168 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்களைப் பெற்று மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் போட்டியிடவுள்ளன.
Add Comment