இலங்கை பிரதான செய்திகள்

கோதபாயவின் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் என்னிடம் உண்டு – மேர்வின் சில்வா


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை கொலைகள் மற்றும் கோதபாய ராஜபக்ஸவின் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோதபாய பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாகவும் அது குறித்து வாக்கு மூலம் அளிக்கத் தயார் எனவும் தாம் விடுத்த அறிவிப்பிற்கு இதுவரையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தாம் பூரண ஆதரவினை வழங்குவதாகத் தெரிவித்துள்ள மேர்வின் சில்வா ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்க ரணிலை விடவும் பொருத்தமான தலைவர் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.