உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்


பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் உலகின் முதல்தர வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிசானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நடால் 6-0, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் பல்கேரியாவைவின் கிரிகர் டிமிட்ரோவ், ஸ்பெயினின் பாப்லோ கரிபியோ பஸ்டாவிடம் 6-3, 7-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.