எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்றனர் எனவும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சரிவரச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பதனை விடுத்துவிட்டு சம்பந்தன் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான முறையில் அரசாங்கத்தை விமர்சனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment