புனேயில் இன்று நடைபெற்ற நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையில் நடைn ற்ற போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற டெல்ல அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர்கிங்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து 212 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதனையடுத்து சென்னை சுப்பர் கிங்கஸ் அணி 13 ஓட்ட வித்தியாசத்தில் வென்றதுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
Add Comment