குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.கல்கிஸ்ஸ காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால மற்றும் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் ஆகியோரின் விளக்க மறியல் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்து விட்டதாகக் குற்றம் சுமத்தி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 14ம் திகதி வரையில் இவர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment