பிரதான செய்திகள் விளையாட்டு

புயலால் பாதிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் மைதானங்களை புனரமைப்பதற்காக சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி :

மேற்கிந்தியத் தீவுகளில் மரியா, இர்மா புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானங்களைப் புனரமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. லோர்ட்ஸில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் உலக அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் போட்டியிடவுள்ளன.

ஒய்ன் மோர்கனைத் தலைவராகக் கொண்ட உலக அணியில் தமிம் இக்பால், ஷகிப் அல் ஹஸன், ஷகிட் அப்ரிடி, ஷொய்ப் மலிக், தினேஷ் கார்த்திக், திஸர பெரேரா, ரஷீட் கான் ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் மேலும் நியூசிலாந்தின் மிற்சல் மக்லெனகன், லுக் றொங்கி ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.