இலங்கை பிரதான செய்திகள்

ஹற்றன் பொகவந்தலா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

ஹற்றன் பொகவந்தலா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம் ஹற்றன் இருந்து பொகவந்தலாவ பகுதியியை நோக்கி பயணித்த ஜீப்வண்டியும் பொகவந்தலாவவையில் இருந்து ஹற்றன்  பகுதியை நோக்கி பயணித்த பேருந்தோடு ஜீப்வண்டி மோதுண்டத்தில் ஜீப்வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக அட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்றைய தினம் மாலை; அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் வனராஜ பகுதியில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. அட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணித்த ஜீப்வண்டி அதிக வேகத்தின் காரணமாக வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் கடடுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

இதேவேளை மலையகத்தில் தொடரும் சீர்ரற்ற காலநிலை காரணமாக பிரதான விதிகளில் வாகனங்களை செலுத்து சாரதிகள் மிகவும் அவதான மாக வாகனங்களை செலத்துமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர் . இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.