பிரதான செய்திகள் விளையாட்டு

சன்ரைசர்ஸை வென்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஒப்ஸ் சுற்றினை உறுதி செய்தது

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வென்றதன்மூலம் பிளேஒப்ஸ் சுற்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 46-வது போட்டி இன்றைதினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பினை தெரிவுசெய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 8இல் வெற்றி பெற்று பிளேஒப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers