இந்தியா சினிமா பிரதான செய்திகள்

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு அளித்தமையால் காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு!


காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு அளித்தமையால் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தை எதிர்க்க கர்நாடகா மாநிலத்தில் உள்ள சில அமைப்புக்கள் தயாராவதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினி கர்நாடகத்தை சேர்ந்தவர். எனினும் தமிழ் நாட்டுத் திரைப்படங்களிலேயே தனது நடிப்பை தொடங்கி சாதனை பெற்றார்.

ரஜினி அரசியலில் இறங்கியதையடுத்து காவிரி பிரச்னையில் தனது சொந்த மாநிலத்தை விட்டு தமிழ்நாட்டை ஆதரித்தார். அண்மையில் நடந்த காவிரி மேலாண்மை வாரியத்திற்கான போராட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனமும் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜனிக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகள் ரஜினி படம் வெளியாகும் நாளில் கலவரங்களில் ஈடுபடுவதற்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றது.. எனவே கர்நாடகாவில் காலா வெளியாகுமா? என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தற்போது கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் சில நாட்களில் புதிய அரசு ஆட்சி அமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 7 other subscribers