Home இந்தியா தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடர் போராட்டம்

by admin


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோன்று பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கரும் நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதுடன் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷங்களை எழுப்பினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More