இந்தியா பிரதான செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் – சென்னையில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் திரண்டனர்….

தூத்துக்குடியில் ஸ்டெஎதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் இன்று கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோசமிட்ட அவர்கள் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேபோல் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap