இலங்கை பிரதான செய்திகள்

நிறைவேற்று ஜனாதிபதி முறை- காலத்தை கடத்தும் உரையாடல்களுக்கு தயாரில்லை…

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதியுடனோ அல்லது பிரதமருடனோ கலந்துரையாடி காலத்தை கடத்துவதற்கு தாம் தயாரில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக தெரிவிததுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,

20 ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாட முடியும். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது  குறித்து பிரதமருடனோ அல்லது ஜனாதிபதியுடனோ கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இருவருமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக கூறியே ஆட்சிக்கு வந்தனர்.

அதனால்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை கடத்தவோ அதனூடாக தமது தேவைகளை பூர்த்தி செய்யும் சதிவலையில் சிக்கவோ  இடமளிக்கப்போவதில்லை. எனினும் அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தம் குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஆரோக்கியமான மாற்றங்களை மேற்கொள்ள தயார் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக குறிப்பிட்டுள்ளார்..

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap