பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து – செர்பியா , மெக்சிகோ அணிகள் வெற்றி – பிரேசில் – சுவிட்சர்லாந்து சமன்


ரஸ்யாவில் நடைபெற்று வரும்  உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்று நடைபெற்ற ஈ பிரிவின் முதல் போட்டியில் செர்பியா அணி 1-0 என்ற செற் கணக்கில் கொஸ்ரா ரிகா அணியினை வென்றுள்ளது . முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் செர்பியா அணி ஒரு கோல் போட்டதனால் செர்பியா 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின்னர் கொஸ்ரா ரிகா அணியால் பதில் கோல் அடிக்க முடியாது போனமையினால் 1-0 என செர்பியா வெற்றி பெற்றது.

இதனையடுத்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகள் போட்டியிட்டநிலையில் முதல் பாதி நேரத்தில் மெக்சிகோ அணி ஹ ஒரு கோல் போட்டதனால் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பதனால் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற   மூன்றாவது போட்டியில்   பிரேசில், சுவிட்சர்லாந்து இடையிலான லீக் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.