இலங்கை பிரதான செய்திகள்

உதயங்கவின் வரவு, மகேந்திரனை சுண்டி இழுக்கும், மகிந்தவின் சவாலா?


மிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளை நாடவுள்ளது. இந்த அமைப்பு உதயங்க கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரைவை பெறவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உதயங்கவீரதுங்கவின் சார்பில் தமது அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர் என நலின் நிசங்க என்பவர் தெரிவித்துள்ளார்.

மிக்விமானக்கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக ஏற்கனவே சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே வேளை உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு மீள அழைத்தால் அர்ஜுணா மகேந்திரண சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரமுடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.