Home இலங்கை உதயங்க வீரதுங்க விரைவில் நீதிமன்றில் முன்னிலையாவார்…

உதயங்க வீரதுங்க விரைவில் நீதிமன்றில் முன்னிலையாவார்…

by admin


ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நீதிமன்றில் முன்னிலையாவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் ஊடாக கைது செய்யும், சர்வதேச பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சட்டத்தரணிகள் ஊடாக அவர் நீதிமன்றில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More