உலகம் பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – தாய்லாந்து குகையில் இருந்து 4 சிறார்கள் மீண்டனர்….

தாய்லாந்து குகையில் இருந்து உள்ளுர் நேரம் இரவு 8 மணி வரை 4 சிறார்களை மீட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன. எனினும் உள்ளுர் ஊடகங்கள் சில 6 சிறார்களை மீட்டதாக தெரிவித்துள்ளன. மீட்பு பணி தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மீட்பு குழுவின் தலைவர் நாளை காலை மீண்டும் மீட்பு பணி தொடரும் என அறிவித்துள்ளார்.

 

தாய்லாந்து குகையில் இருந்து இரு சிறார்கள் மீண்டனர்….

மீட்பு

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களில் இருவர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரியை கோடிட்டு கூறியதாக ரொய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  இரண்டு சிறுவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதனை இதனை சியாங் ராய் சுகாதாரத்துறை தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார். அப்பகுதியில் இருந்து இரண்டு அம்புலன்ஸ்கள் புறப்பட்டுள்ளன. அதே போல, அங்கிருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்படுவதை செய்தியாளர்கள் சிலர் ருவீட் செய்துள்ளனர்.

எனினும், அதில் யார் இருக்கிறார்கள், அது எங்கு செல்கிறது என்று தெளிவாக தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை மீட்பு பணியாளர்கள் இன்று காலை மிண்டும் தொடங்கினர். தற்போதைய சூழ்நிலையில் அங்கு பெய்த  வந்த மழை நின்றுவிட்டதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மீட்பு பணியினை ‘டி-டே’ என அழைக்கும் அதிகாரிகள், வெளியே வர அச்சிறுவர்கள் பலமாகவும் தயாராகவும் உள்ளதாக கூறுகின்றனர். உள்ளூர் நேரப்படி 10:00 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஒரு அதிகாரி கூறினார்.

Presentational grey line

மீட்பு பணித்திட்டம்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் திட்டம் குறித்த தகவல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

  • என்ன உபகரணங்கள்?: காற்று அடைக்கப்பட்ட கொள்கலன்கள், முழு முக மாஸ்குகள்
  • ஒரு சிறுவருடன் இரண்டு முக்குளிப்போர் இருப்பார்கள்
  • மீட்பு பணியாளர்கள் போட்டுள்ள கயிறு அவர்களை வழிநடத்த, அனைவரும் ஒன்றாக சுழியோடுவார்கள்.
  • மிகவும் குறுகிய பாதை வரும்போது, தங்கள் பின்னாலிருக்கும் கொள்கலன்களை விடுவித்து, அதனை உருட்டிவிடுவார்கள். அதன் வழியாக அந்த சிறுவரை வழிநடத்துவார்கள்
  • சாம்பர் 3 முதல் குகையின் முகத்துவாரத்திற்கு நடந்து செல்லலாம்.

சிறுவர்களுக்கு  சுழியோடுவது  குறித்து குறைந்தளவிலாவது தெரிந்திருக்க வேண்டும், திடமான மனத்தோடு, பதட்டமில்லாமல் இருக்க வேண்டும்.

Presentational grey line

முன்னதாக இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சுழியோடிகள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அங்கு உள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாய்லாந்து

12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் முன்பு தெரிவித்திருந்தார். தற்போது வரை அங்கு சூழ்நிலை  நிலமை சாதகமாக உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்தார்

கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.

குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஒக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த குகை அமைந்துள்ள சியாங் ராய் மாகாணத்தின் ஆளுநரான நரோங்சக், “குகையில் சிக்கியுள்ளவர்களின் உடல்நிலை, நீரின் மட்டம் மற்றும் வானிலை போன்றவற்றை பார்க்கும்போது, தற்போது முதல் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் அவர்களை மீட்பதற்கான சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது” என்று கூறுகிறார்.

பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியசிறுவர்கள்

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை நேரத்தில், குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் தங்களது குடும்பத்திற்கு எழுதியுள்ள கடிதங்களை முக்குளிப்பவர்கள் மூலம் அனுப்பி வைத்தனர்.

அதில், ”கவலைப்படாதீர்கள்.. நாங்கள் தைரியமாக உள்ளோம்” எனக் கூறி தங்களது பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து குகை: "சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்பதற்கு இலக்கு"

”ஆசிரியரே, எங்களுக்கு நிறைய வீட்டுப்பாடங்களைத் தராதீர்கள்” என ஒரு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களில் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு, இச்சிறுவர்கள் அணியின் கால்பந்து பயிற்சியாளரும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

”அன்பிற்குரிய சிறுவர்களின் பெற்றோர்களே. தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். மீட்பு குழுவினர் எங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றனர்” என 25 வயதான பயிற்சியாளர் கூறியுள்ளார்.

”என்னால் முடிந்தவரைச் சிறுவர்களை கவனித்துக்கொள்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன். எங்களுக்கு உதவியளிக்க வரும் அனைவருக்கும் நன்றி” எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய திட்டம் என்ன?

அபாயகரமான இந்த பணியில் பெருமளவிலான ராணுவம் மற்றும் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவர்களுக்கு பிராண வாயு சிலிண்டர்களை வழங்க சென்ற சுழியோடி ஒருவர் திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவம், அங்கு நிலவும் மோசமான சூழ்நிலையை உணர்த்துவதாக மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர் கருதுகின்றனர்.

தாய்லாந்து குகை: "சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்களில் மீட்பதற்கு இலக்கு"

சிறுவர்கள் தற்போது ஒரு உலர்ந்த இடத்தில் உள்ளதாகவும், ஆனால் மழை தொடர்ந்து பெய்யும்  பட்சத்தில் அவர்கள் இருக்கும் இடத்தின் அளவு 108 சதுர அடிகளாக குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நரோங்சக் கூறுகிறார்.

சிறுவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு  சுழியோடும்  பயிற்சி தேவையென்றும், ஆனால் இன்னமும் அதை அவர்கள் கற்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

முன்னதாக, சிறுவர்கள் குகையிலிருந்து மீட்கப்படுவதற்கு சில மாதகாலமாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ராட்ச இயந்திரங்களை கொண்டு குகையில் துளையிட்டு அங்குள்ள நீரை வெளியேற்றி, அவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வரும் பணி முழுவீச்சியில் நடைபெற்று வருகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers