இந்தியா பிரதான செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்


சத்தீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்ற மோதலில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் ஒடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், தண்டேவாடா-பிஜப்பூர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை ரோந்து சென்ற மாவட்ட ரிசர்வ் படை மற்றும் அதிரடிப் படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதையடுத்து இரு தரப்பிற்குமிடையே இடம்பெற்ற மோதலில் இதில் சில மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டதுடன் அப்பகுதியில் இருந்து துப்பாக்கிகள் சிலவும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.