இலங்கை பிரதான செய்திகள்

அடுத்த மாகாணசபை அமர்வுக்கு முன்னர், அமைச்சர் சபை ஒன்று அமைக்கப்படும்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வடமாகாண அமைச்சர் சபை ஒன்று அடுத்த மாகாணசபை அமர்வுக்கு முன்னர் அமைக்கப்படும். முதலமைச்சருடனும், ஆளுநருடனும் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தான் வெளியிடுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 128வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் கே.ச யந்தன் அமைச்சர் சபை குறித்து கடந்த 16ம் திகதி நடைபெற்ற அமர்வில் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்திற்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கும்போதே அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சபையில் மேலும் கூறுகையில்,

கடந்த 16ம் திகதி நடைபெற்ற மாகாணச பை அமர்வில் அமைச்சர் சபை தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும், ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கும் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது. அவ்வாறு அனுப்பபட்டதா? அதற்கு கிடைத்த பதில் என் ன? அவ்வாறு பதில் எதுவும் கிடைக்கவில்லை ஆயின்  சட்டவாக்க பணிகள், அபிவிருத்தி ப ணிகள் கிடபில் இருக்கும். ஆகவே அமைச்சர் சபை தொடர்பான தீர்வு கிடைக்கும் வரையில் சபையை ஒத்திவையுங்கள், காரணம் அபிவிருத்தி மற்றும் சட்டவாக்க விடயங்கள் குறித்து பேசுவதற்கே சபை கூடுகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் 7 அமைச்சர்கள் என கூறப்பட்டுள்ளது இதற்கு என்ன தீர்வு? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆளுநருக்கு நாம் ஆலோசனை வழங்க இயலாது. அவருக்கு ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களமே வழங்கவேண்டும். மேலும் இந்த விடயம் உச்ச நீதி மன்றில் வழக்கில் உள்ளதால் இதனை குறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை. என கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் எதிர்கட்சிதலைவர் சி.தவராசா ஆகியோர் சிவாஜிலிங்கம் கூறிய கருத்தை மறுத்து 7 அமைச்சர்கள் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என கூறினர். இதனை தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் உச்ச நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்ட முதலமைச்சரின் மனு  9ம் மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்ந்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், அமைச்சர் சபை பிரச்சினை தொடர்பாக ஆளுநருடன் நேரடியாக 10 நிமிடங்களும், முதலமைச்சருடன் நேரடியாக 6 நிமிடங்களும் பேச்சுவார் த்தை நடத்தியிருக்கிறேன். இதன்போது சில ஆலோசனைகளை நான் கூறியுள்ளேன். அதனடிப்படையில் இன்று காலை முதலமைச்சர் சபைக்கு வர முன்னர் என்னோடு சில ஆலோசனைகள் குறித்து பேசியுள்ளார். ஆகவே அடுத்த சபை அமர்வுக்கு முன்னர் மாகாண அமைச்சர் சபை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

நியதிச்சட்டங்கள் எவையும் பேரவை செயலகத்தில் நிலுவையில் இல்லை..

வடமாகாணசபையில் நியதிச்சட்டங்கள் எவையும் நிலுவையில் இல்லை எனவும், இதுவரை வடமாகாணசபையில் 18 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆளுநரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தெரிவிததுளாளர்.

வடமாகாணசபையின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், மற்றும் ப.அரியரட்ணம் ஆகியோர் பேரவை செயலகத்தில் நியதிச்சட்டங்கள் நிலுவையில் உள்ளனவா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும்போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்

இதுவரையில், 17 நியதிச்சட்டங்கள் முறைப்படி ஆளுநரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 18வது நியதிச்சட்டமாக வடமாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஒதுக்கீட்டு நியதிச்சட்டத்திற்கும் ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

மேலும் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள நியதிச்சட்டம் சிங்கள மொழி பெயர்ப்புடன் பேரவை செயலக சட்ட ஆலோசனையுடன் திருத்தப்பட்டு நியதிச்சட்ட குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வடமாகாண வியாபார பெயர்கள் நியதிச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது.

மேலும் வடமாகாண விவசாய நியதிச்சட்டம் சட்ட ஆலோசகரின் சிபார்சுக்கு அமைய முதலமைச்சரின் அமைச்சுக்கும், விவசாய அமைச்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண நீர்ப்பாசன நியதிச்சட்டம் பேரவை செயலக சட்ட ஆலோசகரின் சிபார்சுடன் முதலமைச்சரின் அமைச்சுக்கும், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண வாழ்வாதார நிலைய பொருளாதார நியதிச்சட்டம் சிங்கள மொழி பெயர்ப்பு பேரவை செயலக சட்ட ஆலோசகரின் சிபார்சுடன் முதலமைச்சரின் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண வீடமைப்பு அதிகாரசபை நியதிச்சட்டம் பேரவை செயலக சட் ட ஆலோசகரின் சிபார்சுடன் மீள திருத்தத்திற்காக முதலமைச்சரின் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாண சுற்றாடல் அதிகாரசபை வரைவு பிரதம செயலாளர் ஊடாக அமைச்சர் சபைக்கு சமர்பிக்கப்பட்டு அமைச்சர் சபையிடமிருந்து முதலமைச்சரின் செயலாளர் ஊடாக நியதிச்சட்ட குழுவுக்கு சமர்பிக்கப்பட்டு நியதிச்சட்ட குழுவில் திருத்தப்பட்டு பேரவைக் கு சமர்பிக்கும்படி கூறப்பட்டு விவசாய அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வ டமாகாண சமூக சேவைகள் திணைக்கள நியதிச்சட்டம் பேரவை செயலக சட்ட ஆலோசகரின் சிபார்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே பேரவை செயலகத்தில் எந்தவொரு நியதிச் சட்டமும் நிலுவையில் இல்லை என்றார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers