பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக்கிண்ணத் தொடரில் பெஞ்சமின் பவார்ட் அடித்த கோல் சிறந்த கோலாக தெரிவு

 

ரஸ்யாவில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் ஆர்ஜென்ரினாவிற்கு எதிராக பிரான்ஸ் வீரர் பவார்ட் ( Benjamin Pavard )  அடித்த கோல் சிறந்த கோலாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உலகக்கிண்ணத் தொடரில் மொத்தம் நடைபெற்ற 64 போட்டிகளில் 169 கோல்கள் அடிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சிறந்த கோல் எது என்பதனை இணையத்தினூடாக பிபா வாக்கெடுப்பு நடத்தியிருந்தது .

இதில் ஆர்ஜென்ரினா அணிக்கு எதிரான நொக் அவுட் சுற்றில் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பவார்ட் அடித்த கோலை, சிறந்த கோலாக ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த கோலுக்கு சுமார் 30 லட்சம் ரசிகர்கள் வாக்களித்துள்ளனர் .

22 வயதான பெஞ்சமின் பவார்ட் வியக்க வைக்கும் வகையில் 57-வது நிமிடத்தில் அடித்திருந்த அந்த கோல் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் பிரான்ஸ் அணி சமநிலையை எட்ட உதவியிருந்தது.  பரபரப்பான அந்த போட்டியில் ; பிரான்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap