இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

உலகத் தமிழ் நாடக விழாவில் 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்பு…

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் அறிவிப்பு.

யாழ்.தர்மினி பத்மநாதன் .

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் ”உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத்தின் தலைவர் எம் .அரியநாயகம் தலைமையில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 6 ஆம் , 7 ஆம் திகதிகளில் உலகத்த தமிழ் நாடக விழா லண்டனில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள் பங்கேற்க உள்ளன என . பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் அறிவித்துள்ளதாக இலங்கைக்கான ஒழுங்கமைப்பாளர் யாழ்.தர்மினி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

உலகத்த தமிழ் நாடக விழா குறித்து இன்று [28.07.2018 ] காலை யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம் ”உடல்” சஞ்சிகையின் அனுசரணையில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 6 ஆம் , 7 ஆம் திகதிகளில் உலகத்த தமிழ் நாடக விழாவினை லண்டனில் திடடமிட்டுள்ளனர். நாடக விழாவில் கடந்த 2016 ஐ விட விட இம்முறை மிக புகழ் பெற்ற பல நாடுகளிலும் அறியப்பட்ட நாடக ஆசிரியர்கள் பங்கு கொள்ள உள்ளனர்.

குறிப்பாக கடந்த முறை சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட் ட நடிகர் நாசர் இம்முறை ஆற்றுகையாளராக பங்கு கொள்ளும் ஓராள் அரங்கு மிக விசேடமாக இடம் பெற உள்ளது . யாழ்ப்பாணப் பல் கலைக்கழக முன்னாள் துறைத்தலைவர் கலாநிதி சிதம்பரநாதனின் ஆற்றுகை அவரின் குழுவினர் பங்கு கொள்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து விமல் ராஜ அழகய்யாவின் ஆற்றுகையும் அரங்கேற உள்ளது .  இலங்கையில் இருந்து இவ்விரு குழுவினரும் செல்ல உள்ளனர்.

தமிழ் நாட்டில் இருந்து முனைவர் பார்த்திபராஜா வின் நாடகம், . பாண்டிச்சேரி பல்கலைக் கழக நாடகத்துறை கருஞ்சுழி ஆறுமுகம்,  மற்றும் கோபி ஆகியோரினதும் நாடகங்கள். . சிங்கப்பூரில் இருந்து பல்வேறு ஆளுமை கொண்ட ஆனந்தக்கண்ணனின் நாடகம் . யூ .எஸ் .ஏ யிலிருந்து நம் கலை அமைப்பின் ஊடாக கஜேந்திரகுமாரின் ஆற்றுகை லண்டனிலிருந்து சாம் பிரதீபனும் , எழுச்சி மிக்க நாடகங்களை தரும் புலவர் நல்லதம்பி சிவானந்தனின் நாடகம் , ஜெர்மனியில் இருந்து ராதா சர்மாவின் நாட்டிய நாடகம் , யேர்மனியில் இருந்து தானாச் சேர்ந்த கூட்டம் மாணவர்களின் பு திய முயற்சியாக ஒரு நாடகம் , டென்மார்க்கிலிருந்து சிவகலையின் நாடகம் , பிரான்சிலிருந்து ஜெ .எஸ் சேகரின் நாடகம் என்பன அரங்கேற உள்ளன . 12 நாடுகளில் இருந்து 14 நாடகங்கள். அரங்கேற உள்ளன.

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமானது கடந்த 18 வருடங்களாக பிரான்ஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட சங்கமாக பாரிய படைப்புக்களை, பாரீஸ், ஜேர்மன் , லண்டன் ஆகிய நாடுகளிலும் பல நாடகங்களை மேடையேற்றியதுடன் . கூத்திசை குறுந்தகடுகள் என்பவற்றையும் வெளியிட்டு உள்ளனர்.

பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியமும் அரங்கை வலுப்படுத்த வேண்டும் அரங்காளர்களை கௌரவிக்க வேண்டும் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் . ஒருங்கிணைப்பதன் மூலம் தான் , சமூக அரசியல் பொருளாதார விடுதலைக்கான களங்களை களை உருவாக்க முடியும் என்ற நோக்கத்தில் ” உடல் ”என்ற நாடக சஞ்சிகையினை கடந்த 18 ஆண்டுகளாக உருவாக்கியது டன் நாடக விழாவினையும் நடாத்தஆரம்பித்தது. . .

உடல் சஞ்சிகையானது ”ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலை களின் வரலாற்றை நிர்ணயிக்கிறது அதுவே மனித சமூகத்தின் வரலாறும் ஆகின்றது ” என்ற விருது வாக்கியத்துடன் உலகளாவிய இரீதியில் அரங்காளர்களிடம் போய்ச் சேர்ந்துதான் காரணமாக , அரங்காளர்களிடமும் ஆற்றுகையாளர்களிடமும் ஆர்வலர்களிடம் இருந்தும் அதற்கான பாராட்டும் வந்து குவியத் தொடங்கின . அதனூடாக உலகளாவிய ரீதியில் அரங்காளர்களின் தொடர்பு வந்து சேர்ந்தன . உடல் சஞ்சிகை எழுத்து வடிவுடன் மட்டுமன்றி செயல் வடிவிலும் செய்வதற்கான நோக்கம் எழுந்தது.

காரணம் இன்றைய புலம் பெயர்ந்து வாழுகின்ற அரங்காளர்களை நாங்கள் ஒருங்கிணைக்க வேண்டும் . அதன் மூலம் தமிழ் நாடகக் கலைகளின் தரத்தை உலகளாவிய ரீதியில் உயர்த்தலாம் , எமது கலைகளை வேராக எமது இளம் தலை முறையினரிடம் கையளிக்க வேண்டும் அவர்கள் அதை கண்டு களிக்கவும் , உள் வாங்கவும் வேண்டும் .வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயம் , இளம் தலைமுறைகள் எமது கலைகளின் தொன்மையை வேராகக் கண்டு ஏனைய இனத்தவர்களும் தெரிந்து கொள்ள தமிழினத்தின் தொன்மையை தமிழக கலைகளின் தொன்மையை தெரிந்து கொள்ள வேண்டும் .

அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் நாடகக் கலையை வளர்ப்பதற்கான தேடலை வளர்க்க உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அத்துடன் பிரான்ஸ் ஜெர்மனி நாட்டு கலைகளை எமது பிள்ளைகள் தேடிக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொள்வதால் அவர்கள் மத்தியில் எமது கலைகழும் அவர்கள் மத்தியில் போய்ச் சேரவும் , தரம் காணவும் உதவும் என்ற காரணங்களை எமது நோக்கமாக கொண்டுள்ளோம்.

உலக தரத்திதிற்கு தமிழ் நாடகம் உண்டு என்று காட்டவும் , அவர்கள் அதனைப் பார்க்கவும் வேண்டும் என்றும் எங்களுடைய தொன்மையான கூத்து வடிவம் எம்மிடம் உண்டு அவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் உலகளாவிய நாடகவியலாளர்களை , நாடகத்தில் முனைவர் படம் பெற்றவர்களை இணைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்றப்பட்ட்து . இதன் அடிப்படையில் தான் உடல் சஞ்சிகை எழுத்து வடிவமாக இருந்து செயல் வடிவுக்கு மாறியது. இவ்வாறே 2016 இல் பாரிஸ் மாநகரில் முதலாவது உலக தமிழ் நாடக விழா நடைபெற்றது. .

முதலாவது பாரிஸ் நாடக விழா பெரும் வெற்றியையும் , இளையோர் மத்தியில் பெரும் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்துத் தந்தது அதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நடிகர் நாசரின் உரையில் எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர் .. அந்தளவுக்கு பெரும் சிறப்பாக உலகம் கண்டிராத வகையில் பாரிஸ் மாநகரில் இடம் பெற்றது . நாம் என்ன நோக்கத்தைக் கொண்டிருந்தோமோ எமது நோக்கத்தை பிரதி பலிப்பதாக நடிகர் நாசரின் உரையும் இருந்தது .எமது இளையோர் தமிழ் நாடகக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் .தொன்மையை பேணா வேண்டும் அத்தோடு ஏனைய நாட்டுக் கலைகளையும் அறிய வேண்டும் என்றும் நாசர் சொல்லி இருந்தார் .எனவே முதல் நாடக விழா தந்த வெற்றியும் தேவையும் அடிப்படையாக வைத்து உணர்ந்து விழாவை தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற உந்து சக்தியால் 2 ஆவது உலக தமிழ் நாடக விழாவை இவ்வருடம் இலண்டனில்திட்டமிட்டு உள்ளோம்.

அத்துடன் ”உடல் ”சஞ்சிகை சார்ந்து செயற்படுகின்ற ஒருங்கிணைப்பாளர்கள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். ஜெர்மனியில் இருந்து ஐயம்பிள்ளை சொர்ணலிங்கம், நயினை விஜயன் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி, யாழில் யாழ் தர்மினி, சுவிஸ், இத்தாலி, டென்மார்க்கில் என்று உடல் சஞ்சிகையில் ஒருங்கிணைப்பாளர்கள் நாடக விழாவிலும் செயற்படுகின்றனர் . இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உள்ளனர். இவர்கள் நாடகம் சார்ந்து , விழா சார்ந்து பணி புரிகின்றனர். பிரான்ஸ் கலை கலாசார ஒன்றியத்தினர் லண்டன் மாநகரில் ஒரு குழுவை அமைத்து, புதிய இணைப்பாளர்களை இணைந்து செயற்படுகின்றனர். அரங்க விழாவில் பங்கு கொள்ளுதல் பொருட்டு நாடகங்கள் 30 நிமிடம் தான் இருக்க வேண்டும், என்பதும்,  குழுவில் 7 பேர் மட்டும் உள்ளடக்க வேண்டும், என்பதும் கட்டாயம்.  ஏனெனில் போக்குவரத்து, தங்குமிட வசதிகள் எமது பொருளாதார நிலைக்கு ஏற்றமாதிரி திட்டமிட்டு உள்ளோம் .

ஒவ்வொரு நாடகங்களும் .தமிழ் சமூகம் சார்ந்த தமிழ் இனத்தின் விடுதலை சார்ந்து பயனுள்ள நாடகங்களை சமூகத்துக்கு தேவையான நாடகங்களை சமகால பிரச்சனையை பாடுபொருளாகக் கொண்டு படைப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நாடகங்கள் புலம்பெயர் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.  ஏனெனில் எல்லோரும் சமூகம் சார்ந்த சிந்தனையாளர்கள். நாடக துறை சார்ந்த சிந்தனையாளர்கள், விரிவுரையாளர்கள். பொதுவாகவே அரங்க ஆற்றுகையாளர்கள் சமூகத்தின் பால் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள் .இன்றைய காலத்தில் தமிழினம் பல்வேறு தேவைகளை எதிர்நோக்கிக் கொண்டு உள்ளது. புலம்பெயர் தேசத்திலும் சரி, தாயகத்திலும் சரி, தமிழகமோ, ஈழமோ, ஐரோப்பிய நாடோ எங்கும் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு தேடல் உள்ளது . தமிழினத்துக்கான தேவை உள்ளது .பிரச்சனை உள்ளது.  அவற்றை கண் கொண்டு பார்ப்பதாக ஒவ்வொரு படைப்புக்களும் இருக்கும் என்பதில் பூரண நம்பிக்கை உண்டு .

தாயகத்திலிருந்து லண்டனுக்கு பார்வையாளர்களாக வர விரும்புபவர்கள் எந்த நாட்டில் இருந்தும் கலந்து கொள்ள முடியும் எவருக்கும் தடை இல்லை. வர விரும்புபவர்கள் கடிதம் மூலம் ஒன்றியத்திற்கு கோரிக்கை விடுக்கமுடியும். எனினும் வீசா மற்றும் போக்கு வரத்து, தங்குமிடம் உட்பட நாடு திரும்பும் வரை அனைத்திலும் தாங்களே தங்களுக்கு பொறுப்பாக வேண்டும்.

‘உடல் ‘ சிறப்பு இதழுக்காக ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி முடிவடைந்து விட்டது .ஆயினும் பலர் ஆர்வத்துடன் கட்டுரைகள் அனுப்பி உள்ளனர். பலரினது கட்டுரைகள் காத்திருப்பில் உள்ளது. தாயகத்தை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கில் பல்கலைக் கழகத்தில் நாடகத்துறை கல்வியாக உள்ளது. பாடசாலைகளில் உள்ளது. ஆய்வு மாணவர்கள் உள்ளனர் . எல்லோருக்கும் இப்போ வேலைப்பளுக்கள் அதனாலோ என்னவோ பலரிடம் இருந்து கட்டுரைகள் தாமதிக்கின்றன. கட்டுரையாளர்களின் ஒத்துழைப்பே அவர்களின் கட்டுரைகள் சர்வதேச அங்கிகாரம் பெற உதவும் . விழாவுக்கான காலங்கள் நெருங்கத் தொடக்கி விட்டன. வேகமாக மிகச் சுருக்கமான குறுகிய நாளில் விரைவாக கட்டுரை அனுப்ப ஆர்வம் உடையவர்கள் இருப்பின் அதற்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படும்

தாயகத்தில் உள்ளவர்கள் சிறப்பு இதழுக்காக உங்கள் கட்டுரைகளை தாயக ஒருங்கமைப்பாளரின் மின்னஞ்சல் முகவரிக்கோ [ jaaltharmini @mail .com ] அல்லது

oudalmozhi @gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்ப முடியும் . மேலதிக தொடர்புகளுக்கு பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியத் தலைவர் எம் . அரியநாயகம் 0033 617731192 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும் . .மேலும் அரங்க விழாவின் சிறப்பு இதழுக்கு கட்டுரை சமர்ப்பிக்க இயலாதவர்கள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் உடல் சஞ்சிகைக்கு ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்  என தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap