இந்தியா பிரதான செய்திகள்

ஹொமியோபதி கல்வியில் முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.


இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான ஹொமியோபதி கல்வியில்; முறைகேட்டை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹொமியோபதி கல்வியில முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் ஹொமியோபதி மத்திய பேரவை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

2 மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு பதிலாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு, ஹொமியோபதி மருத்துவ கல்லூரி தொடங்கியவர்கள், புதிய ஹெ கல்வியை ஆரம்பித்தவர்கள் , மாணவர் எண்ணிக்கையை உயர்த்தியவர்கள் ஒரு வடத்துக்குள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும், இல்லாவிடில் அவர்கள் வழங்கும் ; பட்டம், அங்கீகரிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.