இந்தியா இலங்கை பிரதான செய்திகள்

கொச்சின் விமான நிலையத்தின் ஊடான பயணச் சீட்டை பெற்றவர்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சலுகை…


இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வெள்ளம் காரணமாக மூடப்பட்டதனையடுத்து பயணிகள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை தடுக்கும் நடவடிக்கையினை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

கொச்சின் விமான நிலையம் எதிர்வரும் 26ம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளநிலையில் அங்கிருந்து கொழும்பு வருவதற்காக அனுமதிப்பத்திரத்தினைப் பெற்றுள்ள பயணிகள் தென்னிந்தியாவின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்தில் இருந்தும் தமது பயணங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளது

மேலும் அதற்காக மேலதிகமாக எந்தவொரு கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பிலிருந்து கொச்சினுக்கு செல்ல அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள பயணிகளும் அவ்வாறே தென்னிந்தியாவின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம்; செயற்படக் கூடிய எந்தவொரு விமான நிலையத்திற்கும் பயணிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.