உலகம் பிரதான செய்திகள்

செய்தியாளர்களை தாக்கியமைக்காக உகண்டா ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது.

செய்தியாளர்;களை தாக்கியமைக்காக உகண்டா ராணுவம் மன்னிப்புக் கோரியுள்ளது. கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பாபி வைன் என்பவரை விடுவிக்க கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் போராட்டத்தை படம் பிடித்து செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது செய்தியாளர்;கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு செய்தியாளர்;கள் மீது ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்த படங்கள் வெளியானநிலையில் இவ்வாறு ராணுவம் மனினிப்புக் கோரியுள்ளது.  உகாண்டா ராணுவம் இவ்வாறு மன்னிப்பு கோருவது அரிதினும் அரிதான நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers