மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என குறித்த ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில இதனைத் தெரிவித்துள்ள அவர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்றுவருகின்ற மனித எச்சங்கள் தொடர்பான அகழ்விற்கு தமது ஆணைக்குழு நேரடியான பங்களிப்பினை வழங்குவதுடன் அது தொடர்பான விடயங்களையும் மதிப்பீடு செய்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment