இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கையின் சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில், ஏக காலத்தில் இரண்டு தமிழர்கள்….


இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர்.  ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் கோல் போடுவதில், அதி சிறந்த வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் (செலான் வங்கி), எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர்.  சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அணி

சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவங்ஷ, நௌஷலி ராஜபக்ஷ, துலாங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, ஹசிதா மெண்டிஸ், எழிலேந்தி சேதுகாவலர். இந்த அணியினர்,, ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து பிரித்தானியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை ஈட்டும் முனைப்புடன் சிங்கப்பூரில் நாளை (செப்டெம்பர் 1) ஆரம்பமாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers