Home பிரதான செய்திகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி – சீனா முதலிடம்

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி – சீனா முதலிடம்

by admin


இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் ஆகிய நகரங்களில் கடந்த 15 நாட்களாக நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றுள்ளது.  இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

பதக்கப்பட்டியலில் 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான் 2-வது இடத்தையும், தென் கொரியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை வென்றுள்ளது.

நேற்று மாலை நிறைவு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை, பாடல் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி 2022-ல் ஹாங்சவ்வில் நடைபெறவுள்ள நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான கொடி, ஹாங்சவ் நகர மேயர் ஜு லி யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More