இந்தியா பிரதான செய்திகள்

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி :


கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 98 சதவிகிதம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் 982 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  கர்நாடகத்தில் மைசூர், துமகூர், சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகள் உள்பட 105 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஓகஸ்ட் 31-ந் திகதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67.51 சதவீத வாக்குகள் பதிவாயின. 30 உள்ளாட்சிப் பிரிவுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவை யாவற்றையும் சேர்த்து முழுமையாக 2709 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன.

இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனித்து போட்டியிட்டதால், எதிர்பார்ப்பு அதிகரித்தது. அறிவிக்கப்பட்ட 2664 இடங்களில், காங்கிரஸ் 982 இடங்களையும், பாஜக 929 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 307 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நகர்ப்புறங்களில் பாஜக அதிக இடங்களிலும், கிராமப்புறங்களில் காங்கிரசும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளமம் கூட்டணியின் வளர்ச்சி அரசியல் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், பாஜகவின் பொய் பிரசாரத்தை நிராகரித்து விட்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.