பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனா அரையிறுதிக்கு முன்னேற்றம்


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்சலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில்; செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்துப் போட்டியிட்ட செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-3 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 9 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் லத்வியாவின் வீராங்கனையான செவஸ்டோவாவை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.