இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பு…

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று வியாழக்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு கர்ப்பிணி தாய் ஒருவர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை மருத்துவ காரணங்களினால் இறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை குறித்த தாயை பார்வையிட வந்த கணவர் மற்றும் உறவினர் ஒருவரும்,பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியுள்ளதோடு,பாதுகாப்பு உத்தியோகஸ்தரையும் தாக்கியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து குறித்த இருவரையும் உடனடியாக மன்னார் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

வைத்திய அதிகாரி மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று வியாழக்கிழமை காலை 8 மணிமுதல் வைத்தியசாலை வைத்தியர்கள் ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap