குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழில் ஹெராயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலையே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 282 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளினை மீட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும், கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
Add Comment