உலகம் பிரதான செய்திகள்

அப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும்……


அப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் தொடர்கிறது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் 200 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்த வர்த்தக போரில் அமெரிக்க நிறுவனமான அப்பிள் நிறுவனம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலான அப்பில் போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் போது அப்பிள் போன்கள் கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் ஆப்பில் போன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பிள் போன்களின் மீதான கூடுதல் வரிவிதிப்பை தவிற்க வேண்டுமானால் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers