குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும் இரண்டு வாள்கள் மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் வாள்களுடன் பயணிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளையே மூவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் உடுவில் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்கள் 21, 23 வயதுகளையுடையவர்கள் எனவும் , அவர்களிடம் மேலதிக விசரானைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love
Add Comment