இலங்கை பிரதான செய்திகள்

இன்று முதல் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு


எரிபொருட்களின் விலை, இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. விலைநிர்ணயத்தினை ஆராயும் குழு, நிதியமைச்சில் நேற்று நடத்திய விசேட கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 2 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் தலா 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 145 ரூபாவில் இருந்த 149 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 157 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டீசலின் விலை 5 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, டீசலின் புதிய விலை 123ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap