உலகம் பிரதான செய்திகள்

லிபியாவில் திரிபோலி விமான நிலையம் மீது எறிகணை வீச்சு…..

லிபியா தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து எறிகணைகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப்போர் நடந்து வரும் லிபியாவில் அண்மையில் கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் அந்த நாட்டின் தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற ஒரே விமான நிலையமான மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து நேற்று முன்தினம் எறிகணைகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் ஒன்று மத்திய தரைக்கடலில் போய் விழுந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த எறிகணை வீச்சை நடத்தியது யார் என உடனடியாக கண்டறியப்படவில்லை எனினும் இந்த எறிகணை தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த எறிகணைத் தாக்குதல் எதிரொலியாக, எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து திரிபோலிக்கு சென்றுனொண்டிருந்த கொண்டிருந்த லிபிய விமானம் மிஸ்ரட்டா நகருக்கு திருப்பி விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நகரம் திரிபோலியில் இருந்து 190 கி.மீ. கிழக்கே அமைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers